கிருஷ்ணகிரி
துணிக்கடை முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு
|கிருஷ்ணகிரியில் துணிக்கடை முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளுடன் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:-
கிருஷ்ணகிரியை அடுத்த பெத்ததாளாப்பள்ளியை சேர்ந்தவர் கணேசன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை 10.45 மணி அளவில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் உள்ள துணிக்கடை முன்பு தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு, அதே கடை வளாகத்தில் உள்ள தன்னுடைய நண்பரை பார்த்து விட்டு திரும்பினார். அப்போது அங்கு நிறுத்தி இருந்த அவரது மோட்டார்சைக்கிளை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அந்தக் கடை வளாகத்தில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், மோட்டார்சைக்கிளில் வரும் இருவரில் ஒருவர் கீழே இறங்கி கணேசனின் மோட்டார்சைக்கிளை கள்ளசாவி போட்டு திருடி செல்வது தெரிய வந்தது. இந்த வீடியோ காட்சி ஆதாரங்களுடன் கணேசன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.