தஞ்சாவூர்
கசாயத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 7 பவுன் நகை திருட்டு
|பேரளம் அருகே சேலை வியாபாரம் செய்வது போல நடித்து கசாயத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 7 பவுன் நகைகளை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
நன்னிலம்;
பேரளம் அருகே சேலை வியாபாரம் செய்வது போல நடித்து கசாயத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 7 பவுன் நகைகளை திருடி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
துணி வியாபாரம்
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள நாடாகுடி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி மஞ்சுளா. இவர்களுடைய மருமகள் ரேவதி. சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது துணி வியாபாரம் செய்வதாக கூறி 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவர் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தார்.அந்த பெண்ணிடம் ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ராமகிருஷ்ணன் தனக்கு இருமல் இருப்பதாக கூறினார். இதைக்கேட்ட துணி வியாபாரம் செய்வதாக கூறிய பெண் தனக்கு கசாயம் வைக்க தொியும் என கூறினார்.
7 பவுன் நகை திருட்டு
இதை ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் நம்பினர். பின்னர் அந்த பெண் ராமகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு கசாயம் வைத்து அதில் மயக்க மருந்து கலந்து ெகாடுத்ததாக கூறப்படுகிறது. இதைக்குடித்த ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் மயங்கி விழுந்தனர்.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த பெண் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி, ரேவதி காதில் இருந்த தோடு கம்மல் உள்ளிட்ட 7 பவுன் நகைகளை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
வழக்குப்பதிவு
சுமார் 2 மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் நகை திருட்டுப்போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.பின்னா் இது குறித்து பேரளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற பெண்ணை தேடி வருகிறாா்கள். கசாயத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து 7 பவுன் நகையை பெண் ஒருவர் திருடிச்சென்ற சம்பவம் பேரளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.