< Back
மாநில செய்திகள்
5 பவுன் நகை திருட்டு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

5 பவுன் நகை திருட்டு

தினத்தந்தி
|
3 Oct 2023 1:35 AM IST

தஞ்சை அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை-ரூ.32 ஆயிரம் திருடப்பட்டது.

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மனைவி பிரபாவதி(வயது 73). மருத்துவ பரிசோதனைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி பிரபாவதி மதுரை சென்றிருந்தார். இந்த நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் பிரபாவதியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது உங்கள் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தார். உடனே மதுரையிலிருந்து புறப்பட்ட அவர் வீட்டிற்கு வந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது 2 பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை, 7 கிராம் தோடு மற்றும் ரூ.32 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து பிரபாவதி தஞ்சை தமிழ்ப்பல்கலைகழக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். திருட்டு நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்