< Back
மாநில செய்திகள்
குலசேகரம் அருகே வியாபாரி வீட்டில் 300 கிலோ ரப்பர் ஷீட் திருட்டு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குலசேகரம் அருகே வியாபாரி வீட்டில் 300 கிலோ ரப்பர் ஷீட் திருட்டு

தினத்தந்தி
|
6 March 2023 11:41 PM IST

குலசேகரம் அருகே வியாபாரி வீட்டில் 300 கிலோ ரப்பர் ஷீட் திருட்டு போனது.

குலசேகரம்:

குலசேகரம் அருகே புறாவேலிவிளையைச் சேர்ந்தவர் செல்லன் (வயது 56). ரப்பர் ஷீட் வியாபாரியான இவர், 300 கிலோ ரப்பர் ஷீட்டை விலைக்கு வாங்கி தனது வீட்டையொட்டி உள்ள கார் ஷெட்டில் வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மஆசாமிகள் செல்லன் வீட்டு சுற்றுச்சுவர் ஏறிக்குதித்து உள்ளே புகுந்த அவர்கள் அங்கிருந்த 300 கிலோ ரப்பர் ஷீட்டை திருடி விட்டு தப்பி சென்றனர். திருடப்பட்ட ரப்பர் ஷீட்டின் மதிப்பு ரூ.42 ஆயிரம் ஆகும்.

இது குறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

--

மேலும் செய்திகள்