< Back
மாநில செய்திகள்
குன்னம் அருகே 3 பவுன் நகைகள் திருட்டு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

குன்னம் அருகே 3 பவுன் நகைகள் திருட்டு

தினத்தந்தி
|
22 Oct 2023 12:45 AM IST

குன்னம் அருகே 3 பவுன் நகைகள் திருட்டு போனது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நெடுவாசல் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 29). சரவணன் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இதனால் பச்சையம்மாள் தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி உள்ளார். பின்னர் விடியற்காலை 5.30 மணிக்கு அறையின் கதவை திறக்க முயன்றபோது கதவு வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.இதையடுத்து, அவரது சத்தம்கேட்டு மாமியார் பாக்கியம் கதவை திறந்தார். பின்னர் வீட்டின் அறையில் இருந்த பெட்டி திறந்து கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த 2½ பவுன் சங்கிலி மற்றும் ½ பவுன் மோதிரத்தை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்