< Back
மாநில செய்திகள்

சென்னை
மாநில செய்திகள்
பள்ளிக்கரணையில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு

22 Feb 2023 10:06 AM IST
பள்ளிக்கரணையில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருடி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 54). இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.