காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு
|காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருடப்பட்டது.
காஞ்சீபுரம் பெரியார் நகர் அருகே சுதர்சன் நகர் பகுதியில் வசித்து வருபவர் டேனியல் பால். இவரது மனைவி சாந்தி. ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையில் டேனியல் பால் பணிபுரிந்து வருகிறார். நாகர்கோவிலை சொந்த ஊராக கொண்ட இவர் தனது மனைவி, 2 மகன்கள் என குடும்பத்தினருடன் கடந்த சனிக்கிழமை சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.
இந்த நிலையில் இவரது வீட்டின் மேல் தளத்தில் குடியிருந்துவரும் கார்த்திகேயன் என்பவர் இரவு வெளியில் செல்லும் போது டேனியல் பால் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து டேனியல் பாலுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
நேற்று காலை டேனியல் பால் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்து பார்த்தபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்களை சேகரித்தனர்.
இதேபோன்று, சுதர்சன் நகர் விரிவாக்க பகுதி மற்றும் வைத்தியநாதன் என்கிற நாடி ஜோதிடர் வீட்டில் 8 பவுன் தங்க நகை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி திருடப்பட்டிருப்பது தெரிவந்துள்ளது.
இந்த நிலையில் நாடி ஜோதிடர் வைத்தியநாதன் வீட்டில் கடந்த சனிக்கிழமை அன்று நள்ளிரவு 1.30 மணியளில் கையுறை அணிந்தபடி நோட்டமிட்டவாறு வந்த கொள்ளையன் ஒருவர் கொள்ளையடிக்க வந்த காட்சிகளும், கொள்ளையடித்து கொண்டும் திரும்பும் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.