< Back
மாநில செய்திகள்
முதியவரிடம் 12½ பவுன் நகை திருட்டு
சேலம்
மாநில செய்திகள்

முதியவரிடம் 12½ பவுன் நகை திருட்டு

தினத்தந்தி
|
7 Nov 2022 1:00 AM IST

சேலம் புதிய பஸ் நிலையத்தில் முதியவரிடம் 12½ பவுன் நகை திருட்டு போனது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 71). இவர் குடும்பத்துடன் நேற்று முன்தினம் தர்மபுரியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து தர்மபுரிக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றார். இதையடுத்து தர்மபுரி பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது, கையில் வைத்திருந்த ஒரு பையை காணவில்லை. அதில் 12½ பவுன் நகை இருந்தது. சேலம் புதிய பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தபோது, பஸ்சில் நகைகள் வைத்திருந்த பையை மர்ம நபர் திருடி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் மோகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்