< Back
மாநில செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருட்டு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருட்டு

தினத்தந்தி
|
26 July 2023 12:09 PM IST

செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை திருடப்பட்டது.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 56). இவர் கடந்த 22-ந் தேதி காலை 11 மணியளவில் மனைவியுடன் சொந்த விஷயமாக வீட்டை பூட்டிக்கொண்டு காரைக்குடி சென்றார்.

நேற்று முன் தினம் இரவு தனது வீட்டுக்கு வந்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ¾ கிலோ மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் போன்றவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்