< Back
மாநில செய்திகள்

கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

14 Sept 2023 1:15 AM IST
சிங்காநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருடப்பட்டது.
சிங்காநல்லூர்
கோவை அருகே உள்ள நீலிக்கோணம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 54). இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தாயுடன் திண்டுக்கல் சென்று விட்டார். பின்னர் 2 நாட்கள் கழித்து வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிவிட்டு சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.4 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.