< Back
மாநில செய்திகள்
காட்டாங்கொளத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை-பணம் திருட்டு
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

காட்டாங்கொளத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை-பணம் திருட்டு

தினத்தந்தி
|
19 Dec 2022 2:56 PM IST

காட்டாங்கொளத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை-பணத்தை திருடர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

பூட்டு உடைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் கோபாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 65). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னை சூளைமேடு பகுதியில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை-பணம் கொள்ளை

இதையடுத்து, உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 25 பவுன் தங்க நகை, வெள்ளிப் பொருட்கள், ரூ.2½ லட்சம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சுதர்சன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்