< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கருங்கல் அருகே அரசு பள்ளியில் திருட்டு
|15 March 2023 12:15 AM IST
கருங்கல் அருகே அரசு பள்ளியில் திருட்டு நடந்தது.
கருங்கல்:
கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள கழிவறை கதவை மாலை நேரத்தில் பூட்டிச் செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு வந்து பார்த்தபோது கழிவறையின் இரும்பு கதவு மற்றும் தண்ணீர் தொட்டியின் மேல் போடப்பட்டிருந்த இரும்பு தகடு ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றிருந்தனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.