< Back
மாநில செய்திகள்
மரம் அறுக்கும் எந்திரத்தை திருடியவர் கைது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மரம் அறுக்கும் எந்திரத்தை திருடியவர் கைது

தினத்தந்தி
|
27 April 2023 1:07 AM IST

மரம் அறுக்கும் எந்திரத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரி சாலை பகுதியில் மரம் அறுக்கும் பட்டறை வைத்திருப்பவர் ஜெய்சிங் (வயது40). இவருடைய பட்டறையில் இருந்து மரம் அறுக்கும் எந்திரம் ஒன்று திருட்டுப் போய்விட்டது. இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஜெய்சிங் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன், சிறப்பு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதில் கண்டமங்கலம் பரமேஸ்வரன் காலனியை சேர்ந்த பாண்டியன் (30) என்பவர் மரம் அறுக்கும் எந்திரத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்