< Back
மாநில செய்திகள்
கோவிலம்பாக்கத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து திருட்டு
சென்னை
மாநில செய்திகள்

கோவிலம்பாக்கத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து திருட்டு

தினத்தந்தி
|
1 Nov 2022 2:30 PM IST

கோவிலம்பாக்கத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றனர்.

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் மேக்ஸ் ஒர்த் நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் சேதுராமன். ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவருடைய மனைவி சீதாலட்சுமி (வயது 48). கடந்த 25-ந் தேதி இவர்கள் வீட்டை பூட்டி விட்டு திருநெல்வேலிக்கு சென்றுவிட்டனர். பின்னர் 30-ந் தேதி இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பக்கவாட்டில் உள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச் சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து பள்ளிக்கரனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்