< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
பட்டாபிராம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
|11 Dec 2022 11:56 AM IST
பட்டாபிராம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகை மற்றும் வெள்ளியை மர்மநபர்கள் திருடு சென்றனர்.
ஆவடியை அடுத்த பட்டாபிராம் தேவராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் வினோத்குமார். இவருடைய மனைவி ஜான்சி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் வீட்டை பூட்டிவிட்டு பட்டாபிராம் சத்திரம் பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்று தங்கினர்.
நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 1½ பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பட்டாபிராம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.