< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
கதவில் உள்ள கண்ணாடியை உடைத்து அழகு நிலையத்தில் திருட்டு
|7 Jan 2023 7:24 PM IST
சென்னை அரும்பாக்கம் அருகே கதவில் உள்ள கண்ணாடியை உடைத்து அழகு நிலையத்தில் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை அரும்பாக்கம் அடுத்த செனாய் நகர், அருணாச்சலம் தெருவை சேர்ந்தவர் நசியா (வயது 34), இவர், அண்ணாநகர் கிழக்கு பகுதியில் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று காலை அழகு நிலையத்தை திறக்க வந்தார். அப்போது முன்பக்க கதவில் இருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரூ.80 ஆயிரம் மற்றும் 2 செல்போன்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.