< Back
மாநில செய்திகள்
மளிகை கடையில் திருட்டு
சேலம்
மாநில செய்திகள்

மளிகை கடையில் திருட்டு

தினத்தந்தி
|
21 Aug 2022 1:39 AM IST

கொண்டலாம்பட்டியில் மளிகை கடையில் திருட்டு போனது.

கொண்டலாம்பட்டி:-

சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது 43). இவர் கொண்டலாம்பட்டியில் உள்ள ெரயில்வே மேம்பாலம் இறக்கத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு கூரையை பிரித்து கடைக்குள் இறங்கிய மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் கடையில் இருந்த ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று கடைக்கு வந்த மதன்ராஜ், கூரை பிரிந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கல்லாவில் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் கடையில் இருந்த ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து மதன்ராஜ் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்