< Back
மாநில செய்திகள்
மகேந்திரமங்கலம் அருகேபெண் வீட்டில் நகை, பணம் திருட்டுஅண்ணன், அண்ணி மீது வழக்குப்பதிவு
தர்மபுரி
மாநில செய்திகள்

மகேந்திரமங்கலம் அருகேபெண் வீட்டில் நகை, பணம் திருட்டுஅண்ணன், அண்ணி மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
16 April 2023 12:30 AM IST

பாலக்கோடு:

மகேந்திரமங்கலம் அருகே உள்ள ஜக்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யா (வயது 32). இவருடைய கணவர் பெங்களூருவில் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். சத்யாவிற்கு, சீனிவாசன் (40), மஞ்சுநாத் (45) என்ற 2 அண்ணன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் சத்யா வீட்டை பூட்டி விட்டு சாவியை தனது அண்னி வசந்தியிடம் கொடுத்து விட்டு கணவரை பார்க்க பெங்களூரு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் வீடு திரும்பிய சத்யா வீட்டை திறந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 62 ஆயிரம் மற்றும் நிலப்பத்திரம் ஆகியவை திருட்டு போனது தெரிவந்தது.

இதற்கிடையே சாவி அண்ணியிடம் இருக்கும்போது நகைகள் எப்படி திருடு போயிருக்கும் என அண்ணியின் மீது சத்யாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக சீனிவாசன், அவருடைய மனைவி வசந்தி, மற்றொரு அண்ணன் மஞ்சுநாத், அவருடைய மனைவி அமுதா ஆகிய 4 பேர் மீது மகேந்திரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மகேந்திரமங்கலம் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்