< Back
மாநில செய்திகள்
4 பெண்களிடம் 20 பவுன் நகைகள் திருட்டு
மதுரை
மாநில செய்திகள்

4 பெண்களிடம் 20 பவுன் நகைகள் திருட்டு

தினத்தந்தி
|
19 Nov 2022 1:56 AM IST

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பஸ்சில் பயணம் செய்த 4 பெண்களிடம் 20 பவுன் நகைகள், பணம் அபேஸ் செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பழங்காநத்தம்,

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் பஸ்சில் பயணம் செய்த 4 பெண்களிடம் 20 பவுன் நகைகள், பணம் அபேஸ் செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பஸ்சில் பயணம்

மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியை சேர்ந்தவர் பிரைக்கன்னி (வயது 55). சம்பவத்தன்று இவர் திருப் பரங்குன்றம் செல்வதற்காக ஆண்டாள்புரம் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறினார். அப்போது டிக்கெட் எடுக்க பர்சை பார்க்கும் போது பையில் அதனை காணவில்லை. அதில் 7½ பவுன் வளையல், சங்கிலி இருந்தது.

இதே போன்று பழங்காநத்தம் பொட்டூரணி தெருவை சேர்ந்தவர் லோக மணி (52).இவர் பைக்கராவில் இருந்து பழங்காநத்தத்திற்கு டவுன் பஸ்சில் வந்தார். அப்போது அவரிடம் இருந்து மணி பர்சை யாரோ மர்மநபர்கள் திருடிவிட்டனர். அதில் 2¾ பவுன் தோடு இருந்தது. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார்.

20 பவுன் நகை

பழங்காநத்தம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஜோதிமணி (34). சம்பவத்தன்று இவர் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வசந்த நகருக்கு டவுன் பஸ்சில் சென்றார். அவர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி பார்த்த போது அவரிடம் இருந்த 5 பவுன் தங்க நகையை மர்மநபர் திருடி விட்டார். அது பற்றி அவர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

அதே போன்று பழங்காநத்தம் தண்டக்காரன்பட்டியை சேர்ந்த கற்பவள்ளி பஸ்சில் வந்த போது அவரிடம் இருந்து 5 பவுன் நகை மற்றும் 400 ரூபாயை திருடி சென்று விட்டனர். இந்த சம்பவங்களில் 4 பெண்களிடம் மொத்தம் 20 பவுன் நகைகள் மற்றும் பணம் ஆகியவை திருடு போனது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்