< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
பர்கூர் அருகே தொழிலாளி வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
|23 Sept 2022 12:15 AM IST
பர்கூர் அருகே தொழிலாளி வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா குண்டியால்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னகண்ணு (வயது 75). தொழிலாளி. இவர் கடந்த 21-ந் தேதி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர்கள் வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்தனர்.பின்னர் அவர்கள் வீட்டில் பீரோவை திறந்து உள்ளே இருந்த 9 பவுன் நகைகளை திருடி கொண்டு தப்பி சென்றனர்.
இந்த நிலையில் வீட்டில் நகைகள் திருட்டு போனதை அறிந்து சின்னக்கண்ணு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பர்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மும்தாஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.