< Back
மாநில செய்திகள்
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து  40 பவுன் நகை கொள்ளை
மதுரை
மாநில செய்திகள்

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை கொள்ளை

தினத்தந்தி
|
24 Jun 2022 2:26 AM IST

திருமங்கலத்தில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


திருமங்கலத்தில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மருந்தாளுனர்

திருமங்கலம் தேவர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது 61). இவர் மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஸ்டெனோவாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி சேடபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் தமிழ்ச்செல்வி பணிக்கு சென்றுவிட்டார். சுந்தரம் திருமங்கலம் குதிரைசாரி குளத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுவிட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் இவரது வீட்டின் பின்பக்க கதவை திறந்து வீடு புகுந்து பீரோவில் இருந்த 40 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். அதே நேரத்தில் அருகே இருந்த மற்றொரு பீரோவில் இருந்த நகை, பணம் அப்படியே உள்ளன.

விசாரணை

மாலை 4 மணிக்கு வீடு திரும்பிய சுந்தரம் வீட்டின் உள்ளே சென்றபோது மரக்கதவு பூட்டி இருந்தது. பின் பக்க கதவை சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு நகை கொள்ளைபோனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சுந்தரம் திருமங்கலம் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் தலைமையில் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் கைரேகைகள், தடயங்களை பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்