தர்மபுரி
அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் வளாகத்தில்கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 ஆயிரம் திருட்டு
|நல்லம்பள்ளி:
அதியமான்கோட்டையில் உள்ள தட்சிணகாசி காலபைரவர் கோவிலில் நேற்று தேய்ப்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது. கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பெங்களூருவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் வந்தனர். காரை கோவில் வளாக பகுதியில் உள்ள தனியார் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு சென்றனர்.
பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் வந்து பார்த்தபோது கண்ணாடி உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காரின் உள்ளே சென்று பார்த்தபோது ரூ.3 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டு, ஆதார் கார்டு, பான்கார்டுகளை மர்ம கும்பல் திருடிசென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மகும்பலை தேடி வருகின்றனர்.