தீரன் சின்னமலை நினைவு தினம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
|தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை,
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 268-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அங்கிருந்த உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழச்சியில் அமைச்சர்கள், சென்னை மேயர் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
"சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை! அவர் நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.