< Back
மாநில செய்திகள்
தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு
சேலம்
மாநில செய்திகள்

தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு

தினத்தந்தி
|
5 Aug 2022 1:18 AM IST

சங்ககிரியில் பல்வேறு கட்சிகள் சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

சங்ககிரி:-

சங்ககிரியில் பல்வேறு கட்சிகள் சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கொ.ம.தே.க., பா.ம.க.

சங்ககிரியில் கொ.ம.தே.க. சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினவிழா அனுசரிக்கப்பட்டது. கொ.ம.தே.க. தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கி அலங்கரிக்கப்பட்ட தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் தெற்கு மாவட்ட செயலாளர் சரவணன், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பா.ம.க. சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட தலைவர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் செல்வகுமார், சங்ககிரி நகர செயலாளர் அய்யப்பன், எடப்பாடி நகர செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா

இதேபோல் பா.ஜனதா கட்சி சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் முன்னிலை வகிக்க தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அனிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் சேலம் மாவட்ட தலைவர் சுதிர்முருகன், மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்பட மாநில, மாவட்ட கட்சி நிர்வாகிகள் பலர ்கலந்து கொண்டனர்.

சங்ககிரி வட்ட கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம், கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை கூட்டமைப்பு சார்பில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சங்ககிரி அறக்கட்டளை தலைவர் சண்முகம் தலைமையில் சங்ககிரி கொங்கு வேளாளர் இளைஞர் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் முருகேசன், பொன்.கோவிந்தராஜ், குமாரவேலு, சேகர் உள்பட பலர் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கொங்கு இளைஞர் பேரவை

தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் கந்தசாமி தலைமையில் தீரன்சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில இளைஞர் அணி செயலாளர் சதீஷ், சேலம் மாவட்ட செயலாளர் ஜெயபால், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதி செயலாளர் பிரபு தலைமையில் சேலம் மாவட்ட பொறுப்பாளர்சுகுமார் பலர் கலந்து கொண்டு மலர்தூவிமரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்