< Back
மாநில செய்திகள்
தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு
கரூர்
மாநில செய்திகள்

தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு

தினத்தந்தி
|
3 Aug 2022 11:41 PM IST

இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு அ.தி.மு.க. உள்பட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அஞ்சலி

இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை மற்றும் வல்வில் ஓரி ஆகியோரது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து கரூர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை மற்றும் வல்வில் ஓரி ஆகியோரது உருவப்படத்திற்கு முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், முன்னாள் அமைச்சர் சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் பசுவை சிவசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கொங்கு பேரவை

இதேபோல, கரூர் பஸ் நிலையம் அருகே கோவை ரோட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை சிலைக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மேயர் கவிதா கணேசன் கலந்து கொண்டு தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில வர்த்தக அணி செயலாளர் விசா சண்முகம், மாவட்ட செயலாளர் மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கொங்கு இளைஞர் பேரவை சார்பில், கோவை ரோட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல, கொங்கு மக்கள் பேரவை சார்பில் உருவப்படத்திற்கு நிறுவனத்தலைவர் பழ.ஆனந்த் தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.

கொங்கு வேட்டுவ கவுண்டர் பேரவை

இதுபோல, கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் பேரவை சார்பில் அதன் நிறுவனர் சரவணன் தலைமையில் கரூர் பேருந்துநிலையம் காமராஜர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை, வல்வில் ஓரி ஆகியோரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.மேலும், கொங்கு நண்பர்கள் சங்கம் சார்பில், சின்ன கொங்கு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் நல்லசாமி, மாவட்ட செயலாளர் செல்லதுரை, பாலசுப்பிரமணியன் ஆகியோர் தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.இதேபோல, கரூர் பஸ் நிலையம் காமராஜர் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை, வல்வில் ஓரி ஆகியோரது உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் நன்மாறன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்