< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
திரையரங்கம் புதுப்பிக்கும் பணி: இரும்பு சாரம் அமைக்கும் போது தவறி விழுந்த தொழிலாளி பலி
|26 Nov 2022 12:50 PM IST
சென்னை கீழ்ப்பாக்கத்தில் திரையரங்கம் புதுப்பிக்கும் பணிக்கு இரும்பு சாரம் அமைக்கும் போது தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள திரையரங்கத்தில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திரையரங்கத்தின் சுவர் பகுதியில் இரும்பு சாரம் அமைப்பதற்கான பணிகள் நடந்தன. இதற்கான பணியில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டிருந்தனர்.
அதில் அரக்கோணத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 22) என்பவரும் பணியில் இருந்தார். இந்த நிலையில் இரும்பு சாரம் அமைக்கும்போது சுவர் பகுதியில் இருந்து அவர் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ராஜேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சக தொழிலாளர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.