< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
நகை பறித்த வாலிபர் சிக்கினார்
|7 Sept 2022 1:49 AM IST
நகை பறித்த வாலிபர் சிக்கினார்
மதுரை புதுவிளாங்குடி, ராமமூர்த்தி நகரை சேர்ந்த சங்கர்குமார் மனைவி மாலதி (வயது 33). இவர் பழைய விளாங்குடி அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அங்கன்வாடி மையத்தில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென்று மாலதி அணிந்திருந்த தங்க நகையை பறித்து கொண்டு ஓடினார். உடனே அவர் சத்தம் போட அக்கம்பக்கத்தினர் அவரை விரட்டி பிடித்து கூடல்புதூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரித்த போது புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, பெரியார் நகரை சேர்ந்த பாலமுருகன் (30) என்பதும், மதுரையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் குடும்பம் நடத்த பணம் இல்லாததால் தங்க சங்கிலியை பறிக்க முயன்றதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.