< Back
மாநில செய்திகள்
மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மயிலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்கள்

தினத்தந்தி
|
27 May 2023 11:55 PM IST

மயிலை மீட்டு வனத்துறையிடம் இளைஞர்கள் ஒப்படைத்தனர்.

கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் நாய்கள் அதிகரித்து ஆடு, மாடு, கோழிகளை கடித்து குதறி கொன்று விடும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதேபோல கீரமங்கலம் வடக்கு பகுதியில் வயல்வெளியில் சுற்றித்திரிந்த மயிலை சில நாய்கள் துரத்தி துரத்தி கடித்துள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள் நாய்களை விரட்டிவிட்டு காயமடைந்து கிடந்த மயிலை மீட்டு கீரமங்கலம் அரசு கால்நடை மருந்தகத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து அறந்தாங்கி கொண்டு சென்று வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நாய்களால் பல உயிரினங்கள் இறந்து வருவதால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்