< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
கலவரம் ஏற்பட காரணமாக இருந்த வாலிபர் கைது
|21 Sept 2022 12:15 AM IST
கனியாமூரில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளி சொத்துக்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்திற்கு தூண்டியவர்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கலவரம் ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ்-அப் குழுவில் தகவல் மற்றும் கருத்துகள் பதிவு செய்தது தொடர்பாக சின்னசேலம் அருகே தென்சிறுவலூர் கிராமத்தை சேர்ந்த கருப்பையன் மகன் சூர்யா (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.