< Back
மாநில செய்திகள்
வெல்டிங் பட்டறை உரிமையாளர் காதை கடித்து துப்பிய வாலிபர் கைது
பெரம்பலூர்
மாநில செய்திகள்

வெல்டிங் பட்டறை உரிமையாளர் காதை கடித்து துப்பிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
4 July 2023 1:04 AM IST

வெல்டிங் பட்டறை உரிமையாளர் காதை கடித்து துப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கவுல்பாளையம்,

பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் (மேற்கு) பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கவுல்பாளையம்-செங்குணம் பிரிவு ரோடு ராஜீவ்காந்தி சிலை அருகே கவுல்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேட்டின் மகன் மனோகரனுக்கும் (28), பாலமுருகன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை கண்ட சுரேஷ் தகராறை விலக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த மனோகரன், சுரேசை தகாத வார்த்தையால் திட்டி, தாக்கி, இடது காதின் மேற்பகுதியை கடித்து துப்பினார்.

மேலும் கட்டையை காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு மனோகரன் தப்பி சென்றார். இதையடுத்து சுரேஷ் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மனோகரனை நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்