< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாய் காணவில்லை என போஸ்டர் அடித்த இளைஞர்..!
|2 July 2023 11:57 AM IST
நாய் காணவில்லை என போஸ்டர் அடித்து போலீசில் இளைஞர் புகார் அளித்துள்ளார்
தர்மபுரி,
தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டி, கீழ் மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தன் குடும்பத்துடன் உறவினர் திருமணத்திற்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இருந்த அவருடைய வளர்ப்பு நாய் காணாமல் போயுள்ளது.
இதனால் பல இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் நாய் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து நாயை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் அவர் பாசமோடு வளத்து வந்த நாயின் புகைப்படத்தை இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள சுவர்களில் ஒட்டி விளம்பரப்படுத்தியுள்ளார்.
இப்பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் கதவை தட்டுவதும், இரண்டு நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் திருட்டு போனதும் குறிப்பிடதக்கது.