< Back
மாநில செய்திகள்
இளம்பெண் மர்மச்சாவு
சிவகங்கை
மாநில செய்திகள்

இளம்பெண் மர்மச்சாவு

தினத்தந்தி
|
20 Jun 2023 12:15 AM IST

சிவகங்கை அருகே திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன இளம்பெண் மரத்தில் தூக்கில் தொங்கினார். அவரை கணவர் குடும்பத்தினர் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக பெண் வீட்டார் புகார் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை அருகே திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன இளம்பெண் மரத்தில் தூக்கில் தொங்கினார். அவரை கணவர் குடும்பத்தினர் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக பெண் வீட்டார் புகார் தெரிவித்துள்ளனர்.

வரதட்சணை கொடுமை

சிவகங்கையை அடுத்துள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகள் சந்தியா (வயது 24). இவருக்கும் அருகில் உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் (38) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் சோமசுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தார் சந்தியாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

மர்மமான முறையில்..

இந்நிலையில் சந்தியா நேற்று காலை இடையமேலூர் கிராமத்தின் சாலையோர புதர் பகுதிக்குள் மர்மமான முறையில் மரத்தில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அங்கு சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

புகார்

இந்த சம்பவம் தொடர்பாக சந்தியாவின் தாயார் தமயந்தி சிவகங்கை தாலுகா போலீசில் தன்னுடைய மகளை கணவர் சோமசுந்தரம், அவரது அண்ணன் நாகராஜ், மாமியார் சுந்தரவள்ளி ஆகியோர் வரதட்சணை கோட்டு கொடுமைப்படுத்தி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளதாக புகார் கொடுத்துள்ளார்.

திருமணமான 4 ஆண்டில் சந்தியா இறந்ததால் இந்த சம்பவம் குறித்து சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, துணை சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

மேலும் செய்திகள்