< Back
மாநில செய்திகள்
தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
தேனி
மாநில செய்திகள்

தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்

தினத்தந்தி
|
2 Jun 2022 12:03 AM IST

சின்னமனூரில் தம்பிக்கு திருமணம் நடந்த நிலையில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் அய்யாச்சாமி. இவரது மகன் மூவேந்திரன் (வயது 30). இவர் வீட்டு உபயோகப்பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் அவருடைய தம்பி அரவிந்தன் (24). அவர் உறவுக்கார பெண்ணை காதலிப்பதாக கூறி திருமணம் நடக்க இருந்தது. இதற்காக உறவினர்கள், பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது மூவேந்திரனுக்கும், அவருடைய தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் திருமணத்துக்கு அவர்கள் புறப்பட்டு சென்றனர். திருமணம் முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மூவேந்திரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல், அவருடைய உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. அப்போது அவருடைய தலையில் காயம் இருந்தது. இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சின்னமனூர் போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து மூவேந்திரன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். மூவேந்திரன் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தம்பிக்கு திருமண நடந்த நாளில், அண்ணன் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்