< Back
மாநில செய்திகள்
நிலக்கோட்டை பகுதியில் பாசிப்பயறு விளைச்சல் அமோகம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

நிலக்கோட்டை பகுதியில் பாசிப்பயறு விளைச்சல் அமோகம்

தினத்தந்தி
|
21 Oct 2023 3:00 AM IST

நிலக்கோட்டை பகுதியில் பாசிப்பயறு அமோக விளைச்சல் கண்டுள்ளது.

நிலக்கோட்டையை சுற்றியுள்ள மிளகாய்பட்டி, ஆண்டிப்பட்டி, பிள்ளையார்நத்தம், குரும்பப்பட்டி, மைக்கேல்பாளையம், என்.ஊத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. இதையொட்டி விவசாயிகள் தங்களது நிலங்களை உழவு செய்து, கம்பு, சோளம். பாசிப்பயறு, உளுந்து, துவரை உள்ளிட்ட மானாவாரி பயிர்களை சாகுபடி செய்தனர். அதன்பிறகும் மழை ஓரளவு கைக்கொடுத்ததால் பயிர்கள் செழித்து வளர்ந்தன.

அவற்றில் பாசிப்பயறு அமோக விளைச்சல் கண்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது பாசிப்பயறு அறுவடைக்கு தயாராகி உள்ளது. சில கிராமங்களில் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதேபோல் மற்ற பயிர்களும் நன்கு விளைந்துள்ளன. இதனால் மானாவாரி பயிர்களில் இந்த ஆண்டு கூடுதல் மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்