உலகம் ஒரு முக்கியமான ஆளுமையை இழந்து விட்டது - இங்கிலாந்து ராணி மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
|இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96 ஆகும். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து ராணி மறைவுக்கு தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், " இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பிரிட்டிஷ் அரச குடும்பம் மற்றும் ஐக்கிய ராஜ்யத்தின் மக்கள் அனைவருக்கும் என்னுடை ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் இந்தியாவுடன் தனித்துவமான உறவைக் கொண்டிருந்தார். உலகம் ஒரு முக்கியமான ஆளுமையை இழந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.