< Back
மாநில செய்திகள்
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது
மாநில செய்திகள்

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது

தினத்தந்தி
|
6 Jan 2023 10:44 AM IST

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது.

அலங்காநல்லூர்,

பொங்கல் பண்டிகை அன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அதற்கு மறுநாள் பாலமேடு, அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்கும். இந்த 3 ஜல்லிக்கட்டு விழாக்களும் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஜல்லிக்கட்டுகள், பாரம்பரிய வழக்கப்படி அந்தந்த கிராம மக்கள் சார்பில் அமைக்கப்படும் கமிட்டிகள் மூலம் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், ஜனவரி 17-ம் தேதி நடைபெறவுள்ள உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது. அலங்காநல்லூர் வாடிவாசல் அருகில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. வாடி வாசலில் வர்ணம் தீட்டுவது, கேலரி அமைப்பது போன்ற பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் மாடுபிடி வீரர், காளைக்கு கார் பரிசு வழங்கப்படும் என்றும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்