உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது..!
|அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 17-ம் தேதி நடைபெற உள்ளது.
அலங்காநல்லூர்,
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை. மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகை தினத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தமிழக அரசு மற்றும் ஐகோர்ட்டு வழிகாட்டுதலின்படி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வருகிற15-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
இந்த நிலையில், 17-ம் தேதி நடைபெறவுள்ள உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது. அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, கிராம பொதுமக்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து வாடிவாசலில் வர்ணம் பூசும் பணி, கேலரி அமைக்கும் பணிகள், பொக்லைன் எந்திரம் மூலம் மைதானம் சுத்தம் செய்யும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.