< Back
மாநில செய்திகள்
திருவட்டார் அருகே வீட்டின் மதில் சுவரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

திருவட்டார் அருகே வீட்டின் மதில் சுவரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
8 Feb 2023 12:15 AM IST

திருவட்டார் அருகே வீட்டின் மதில் சுவரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

திருவட்டார்:

திருவட்டார் அருகே உள்ள மேக்காமண்டபம் விராலிகாட்டுவிளையை சேர்ந்தவர் தங்கதாஸ் (வயது 78), தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

சம்பவத்தன்று இரவு தங்கதாஸ் சாப்பிட்டுவிட்டு வீட்டின் மதில்சுவர் மீது அமர்ந்து இருந்தார். அப்போது அவர் திடீரென நிலைதடுமாறி பக்கத்து வீட்டின் காம்பவுண்டுக்குள் விழுந்தார். இதில் அவரின் தலையின் பின் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.

உடனே அவரை மகன்கள் சுனில், பிரேம்குமார் ஆகியோர் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று முன்தினம் தங்கதாஸ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பிரேம்குமார் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்