< Back
மாநில செய்திகள்
மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
26 Sept 2023 2:28 AM IST

கபிஸ்தலம் அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

கபிஸ்தலம்:

கபிஸ்தலம் அருகே மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

தொழிலாளி

கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மகன் பாலமுருகன்(வயது38). மரம் வெட்டும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அண்டக்குடியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான தோப்பில் இருந்த தேக்கு மரத்தை வெட்டுவதற்காக மரத்தில் ஏறினாா். மரத்தை வெட்டிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து பாலமுருகன் கீேழ விழுந்தாா்.

பரிதாப சாவு

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பாலமுருகனின் மனைவி சத்யா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்த பாலமுருகனுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்