< Back
மாநில செய்திகள்
விபத்தில் தொழிலாளி பலி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

விபத்தில் தொழிலாளி பலி

தினத்தந்தி
|
17 March 2023 2:05 AM IST

அம்பை அருகே விபத்தில் தொழிலாளி இறந்தார்.

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளம் சங்குமுத்து நகரை சேர்ந்த சந்திரதாஸ் மகன் இசக்கிமுத்து (வயது 38). தச்சுத்தொழிலாளியான இவரும், நண்பர் கார்த்திக்கும் விக்கிரமசிங்கபுரத்தில் வேலை முடித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அம்பை எல்.ஐ.சி. அலுவலகம் அருகே உள்ள மெயின் ரோட்டில் வந்தபோது ஆர்.எஸ். காலனியை சேர்ந்த முத்து சுப்பிரமணியன் என்பவர் கார் கதவு திடீரென திறந்ததால் எதிர்பாராதவிதமாக கார் கதவில் மோதி இசக்கிமுத்து சம்பவ இடத்தில் பலியானார். கார்த்திக் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக கார்த்திக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்