< Back
மாநில செய்திகள்
விபத்தில் தொழிலாளி பலி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

விபத்தில் தொழிலாளி பலி

தினத்தந்தி
|
24 Feb 2023 2:23 AM IST

நாங்குநேரி அருகே நடந்த விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

நாங்குநேரி:

நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 48). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அங்குள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த மாடசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாடசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்