< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
விபத்தில் தொழிலாளி பலி
|24 Feb 2023 12:15 AM IST
விபத்தில் தொழிலாளி பலி
சுல்தான்பேட்டை
கோவை மாவட்டம் சூலூர் சித்தநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியம்(வயது 35). பாரம் தூக்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் சிந்தாமணிபுதூருக்கு வேலைக்கு சென்றுவிட்டு, செட்டிபாளையம்-பல்லடம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது ேமாதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.