< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்
மது குடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
|12 May 2023 3:11 PM IST
மது குடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூலித்தொழிலாளி
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 51). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ருக்மணி. இவர்களுக்கு ஜேம்ஸ் என்ற மகன் உள்ளார். ரவி வேலைக்கு சென்று விட்டு தினமும் மது குடித்துவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
நேற்று முன்தினம் இதே போல் ரவி மது குடித்து விட்டு வந்ததால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரவி வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.