திருவாரூர்
கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
|ராகு- கேது பெயர்ச்சியையொட்டி குடவாசல் அருகே உள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
குடவாசல்;
ராகு- கேது பெயர்ச்சியையொட்டி குடவாசல் அருகே உள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
சேஷபுரீஸ்வரர் கோவில்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருப்பாம்புரத்தில் பிரசித்தி பெற்ற சேஷபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராகு- கேது பெயர்ச்சி விழா சிறப்பாக நடப்பது வழக்கம். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான ராகு- கேது பெயர்ச்சி வழிபாடு வருகிற 8-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 8-ந் தேதி மதியம் 3.40 மணிக்கு ராகு கேது பெயர்ச்சி விழா நடக்கிறது. ராகுபகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.
பந்தல் அமைக்கும் பணி
விழாவில் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மின் வசதி, கழிப்பிட வசதி, பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.