< Back
மாநில செய்திகள்
சென்னை கோட்டத்தில் 128 ரெயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணி தீவிரம்
மாநில செய்திகள்

சென்னை கோட்டத்தில் 128 ரெயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
22 July 2023 7:36 PM IST

சென்னை கோட்டத்தில் 128 ரெயில் நிலையங்களில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ரெயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

சென்னை,

ரெயில் நிலையங்களில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை கோட்டத்தில் 128 ரெயில் நிலையங்களில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ரெயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்து உள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரை- வேளச்சேரி மார்க்கத்தில் ரெயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா அமைக்கும் பணி நடைபெறுகிறது. மேலும், எழும்பூர்- விழுப்புரம், சென்னை- கூடூர், சென்னை- ஜோலார்பேட்டை மார்க்கத்திலும் சிசிடிவி கேமரா அமைக்கப்படுகிறது.

அரக்கோணம்- ரேணிகுண்டா மார்க்கம் உட்பட 74 ரெயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்