விழுப்புரம்
ரூ.2 கோடியில் மீன்பண்ணை அமைக்கும் பணி
|வீடூரில் ரூ.2 கோடியில் மீன்பண்ணை அமைக்கும் பணி அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்
மயிலம்
சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட அரசு மீன் பண்ணைகளை மேம்படுத்துதல் மற்றும் புதிய அரசு மீன் பண்ணைகளை அமைத்தல் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட உள்நாட்டு மீனவர்கள் பயன்பெறும் வகையில் வீடூரில் அரசு மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணையை நவீனமாக்க ரூ.2 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதில் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், மீன்வள உதவி இயக்குனர் சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாசிலாமணி, சேதுநாதன், ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், செழியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் ஜகதீஸ்வரி, மாவட்ட பிரதிநிதி பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர் சுந்தரி தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.