< Back
மாநில செய்திகள்
பயணியர் நிழற்குடை, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடக்கம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

பயணியர் நிழற்குடை, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடக்கம்

தினத்தந்தி
|
12 Sept 2023 1:12 AM IST

பனப்பாக்கம் பேரூராட்சியில் பயணியர் நிழற்குடை, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சி, 14-வது வார்டு ஆதிதிராவிடர் காலனி பகுதியில் நீண்ட நாட்களாக பயணியர் நிழற்குடை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துவந்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றும்பொருட்டு பேரூராட்சி சார்பில் பொது நிதியிலிருந்து ரூ.6 லட்சத்து 90 ஆயிரம் ஒதுக்கீடு செய்து நிழற்குடை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு, ரூ.4½ இலட்சத்தில் புதிய மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 10 மற்றும் 12-வது வார்டுகளில் உள்ள கீழ் ஒத்தவாடை, மேல் ஒத்தவாடை தெருக்களில் 15-வது நிதிக்குழு மானியத்திலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர்பிளாக் சாலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் குமார், பேரூராட்சி துணைத்தலைவர் மயூரநாதன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் வி.எஸ்.ஏ.குலோத்துங்கன், செந்தமிழ் செல்வன், சாந்தி ராஜா, சாரதி உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்