< Back
மாநில செய்திகள்
அய்யனார் கோவில் ஏரியை ரூ.10 லட்சத்தில் ஆழப்படுத்தி படித்துறை அமைக்கும் பணி தொடக்கம்
அரியலூர்
மாநில செய்திகள்

அய்யனார் கோவில் ஏரியை ரூ.10 லட்சத்தில் ஆழப்படுத்தி படித்துறை அமைக்கும் பணி தொடக்கம்

தினத்தந்தி
|
1 Jan 2023 12:51 AM IST

கழுவந்தோண்டி கிராமத்தில் அய்யனார் கோவில் ஏரியை ரூ.10 லட்சத்தில் ஆழப்படுத்தி படித்துறை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், கழுவந்தோண்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் (2022-23) கீழ், கழுவந்தோண்டி அய்யனார் கோவில் ஏரியை ரூ.9 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தி படித்துறை அமைக்கும் பணி, மகளிர் சுகாதார வளாகம் செல்லும் தெருவில் ரூ.5 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி, ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணி, ரூ.13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுமான பணி, ரூ.49 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டில் கழுவந்தோண்டி முதல் பெரியவளையம் வரை செல்லும் தார் சாலை அமைக்கும் பணி, கழுவந்தோண்டி ஊராட்சியில் ரூ.21 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி உள்ளிட்ட இதர பணிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அமிர்தலிங்கம், பொறியாளர் நடராஜன், கழுவந்தோண்டி ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்