< Back
மாநில செய்திகள்
வெங்கடாசலபதி கோவில் தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரம்
விருதுநகர்
மாநில செய்திகள்

வெங்கடாசலபதி கோவில் தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரம்

தினத்தந்தி
|
13 July 2022 3:07 AM IST

சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சாத்தூர்,

சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் தேர் அலங்கரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தென் திருப்பதி

சாத்தூரில் தென் திருப்பதி என அழைக்கப்படும் வெங்கடாசலபதி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் அன்ன வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

தேரோட்டம்

இந்த ஆனி பிரம்மோற்சவ திருவிழாவில் 9-வது நாள் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் நடைபெற்று வந்தது.

இதில் தேர் அலங்கார பணிகள் நேற்று தீவிரமாக நடைபெற்றது. இந்த பணிகளை சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர் சுற்றி வரும் நான்கு ரத வீதிகளிலும் இடையூறாக உள்ள தாழ்வாக செல்லும் மின்வயர்கள், மரக்கிளைகள் மற்றும் சாலையோர கடைகளை அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்