கரூர்
தரிசு நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வர ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது
|தரிசு நிலத்தை சாகுபடிக்கு கொண்டு வர ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
நங்கவரம் குறுவட்டம் இனுங்கூர் ஊராட்சி காகம்பட்டியில், வேளாண்மை - உழவர் நலத்துறை மூலமாக 2021-22-ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 30 விவசாயிகளுக்கு சுமார் 15.24 ஏக்கர் தரிசு நில தொகுப்பு குழு அமைக்கப்பட்டு, குழு முறையாக பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதையடுத்து தரிசு நிலத்தை சாகுபடி செய்வதற்கு நீர் ஆதாரத்திற்காக வேளாண்மை-உழவர் நலத்துறையும், வேளாண் பொறியியல் துறை சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது.
மேலும் விவசாயம் செய்யாமல் தரிசு நில உள்ள பகுதிகளை கண்டறிந்து சாகுபடி செய்வதற்கு தேவையான நீர் ஆதாரம் கிடைக்க வேளாண்துறை சார்பில் தொடர்ந்து இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியின் போது குளித்தலை வேளாண் பொறியாளர் ராஜகுமாரி, இளநிலை பொறியாளர் ராதாகிருஷ்ணன், துணை வேளாண்மை அலுவலர் கணேசன், உதவி வேளாண்மை அலுவலர் அருள்குமார், தரிசு நில தொகுப்பு தலைவர் ராஜூ, விவசாயிகள் உடனிருந்தனர்.